Sunday, November 13, 2011

ஆரோக்கியமான வாழ்விற்கு காலை உணவு.



ஆரோக்கியமான வாழ்விற்கு காலை உணவு மிகவும் முக்கியமானது என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.இது குறித்து பிரிட்டனின் சிக்ரிட் கிப்சன் தலைமையிலான குழு ஆய்வுகளை நடத்தியுள்ளன.இந்த ஆய்வு முடிவு பற்றித் தெரிவித்துள்ள குழுவின் அறிக்கையில் மற்ற உணவு மற்றும் அதிலிருந்து கிடைக்கும் சத்துகள் ஆகியவற்றை காலை உணவு தான் நிர்ணயிக்கிறது.என்றும் தெரிவித்துள்ளார்கள்.பருப்பு வகைகள் மற்றும் பால் ஆகியவற்றைக் காலையில் உட்கொண்டு வருவதனால் உடலுக்கு நோய் இல்லாமல் பாதுகாக்கின்றது எனக் கூறப்படுகின்றது.19 முதல் 64 வயது வரையில் உள்ளவர்களின் 12 ஆயிரத்து 68 மருத்துவ ஆவணங்களைப் ஆய்வு செய்தே இந்த முடிவுக்கு மருத்துவக் குழு வந்திருக்கிறது.இந்த மருத்துவக்குழுவின் அறிக்கையின் படி, பெரும் பாலானவர்கள் திட உணவுக்கு முன்பாக கோப்பி அல்லது தேநீர் போன்றவற்றை அருந்த விரும்புகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.பால் மற்றும் பருப்பு வகைகள் கல்சியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் ஆகியவற்றைத் தரும் என்பதால் அவற்றை எடுத்துக் கொள்வதே நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.