உண்மை செய்திகள் முஹாம்ரா ஆன்லைன்

...................உண்மை துணிவு நேர்மை இதுவே நமது இணையதளத்தின் தனி சிறப்பு .................

............................அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!!!! முஹாம்ராஆன்லைன்!!!!! இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது......
Loading...

Monday, November 7, 2011

கடையநல்லூர் பேட்டை தவ்ஹீத் சகோதரர்களின் கவனத்திற்க்கு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரகும) 
அன்புள்ளம் கொண்ட இஸ்லாமிய பேட்டை சகோதர்களே தங்கள் அனைவரையும் பூர்ண உடல் நலத்துடனும் சீரிய இஸ்லாமிய சிந்தனய்யுடனும் இந்த மடல் உங்களை அடைய இறைவனிடம் பிரார்த்திக்ககிறேன்.
அன்பார்ந்த சகோதர்களே நாம் எல்லாம் தற்போதிய இஸ்லாமிய இயக்கயங்களை  அறிவோம் .




 தமிழ் நாட்டில் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக ஏற்ப்பட்ட  தவ்ஹீத் எழுட்சி பயணம்  இன்று அனைத்து ஊர்களிலும் தவ்ஹீத் கொள்கை சுடர்விட்டு காணப்படுவதை நாம் அனைவரும் ...றிவோம். அதே சமயம்  சமுதாயத்தின் பெயரை சொல்லி நாம் கொள்கை ரீதியான பிரிவும்  மிக அதிகம், காரணம் பணம் ஆசை, பதவி ஆசை, தர் பெருமை,பல தொழுகை பள்ளிகள் மட்டும் அமைப்புகளில் மன்னர்கள் ஆட்சி முறை, மேலும் சாகும்வரை  பதவி வெறிபிடித்து அலையும்  தலைவர்கள் , வருமானம் மட்டும் வேணும் கொள்கை வேண்டாம்  என்ற எண்ணம் கொண்ட தலைவர் மட்டுமே இதற்கான  முதல் காரணம். அல்லாவின் கயிறை பற்றி பிடியுங்கள் என்தை தங்களுடைய  குத்பா மேடைகளிலும் பொது மேடைகளிலும் குர்-ஆன் வசனவரிகளை சுட்டிகாட்டி ஆவேச வசனத்துடன் பேசும் இவர்களினால் , அவர்களின்  நடை முறை வாழ்க்கையில் முறைபடுத்தவில்லையே! என்ற ஏக்கம்  அதிகமான  மக்களின்  கருத்தை பிரதிபலிப்பதாகவே உள்ளது, .அதே சமயம் மறுமை வெற்றிக்காக சில சகோதரர்கள் அல்லாவிடம் கிடைக்க போஹும் பதவியே மட்டும் எண்ணி மார்க்க பணி மற்றும் பொது பணி செய்கிறார்கள். அல்ஹம்து லில்லாஹ் .

அல்லா அவர்களை இம்மையிலும்  மறுமையிலும்  வெற்றி அடைய செய்ய வேண்டும்.அதே சமயம்  நாம் கடையநல்லூரில் ஓர் அணியாக நின்று சமுதாயம் மற்றும் பொது பணிகளை செய்தநிலையில்  இப்போது  கருத்து ரீதியில் பிரிவினை அடைந்துள்ளோம். காரணம் என்ன என்பதை நாம் எல்லாம் அறிவோம்.இஸ்லாம் சொல்ல கூடிய ஏகத்துவ கொள்ளையே நடைமுறை  படுத்தவேண்டியே   கடையநல்லூரில் தவ்ஹீத் மக்களால் ஏற்படுத்த பட்ட  தொழுகை பள்ளிகளில் பொது நிர்வாகம் முறை படி உள்ளதா? நிச்சயமாக இல்லை, அனைத்து பள்ளிகளிலும் மன்னர் ஆட்சி தான் உள்ளது. இதற்க்கு என்ன காரணம் பதவி ஆசை, அல்லது பணம் தான் காரணம்.பொது மக்களிடம் பணம் வாங்கி பள்ளி கட்டினோம் .என்ற எண்ணம் இல்லை.நாளை மறுமையில் அவர்கள் பதில் சொல்லி கொள்வார்கள் .


நாம் கடந்த காலத்தை படிபினையாக கொண்டு அல்லாவின் வாக்குகளையும்,நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களை முழுமையாக பின் பற்ற கூடிய மக்களுகாக ஆக வேண்டும்,ஆஹையால் இன்ஷா அல்லாஹ கடையநல்லூரில் நாம் பேட்டையில் புதியதொரு தவ்ஹீத் பள்ளி ஆரம்பம் செய்யவேண்டும்.
அதன் செயல் பாடு முழுவதும் நபி வழி பள்ளியாக இருக்க வேண்டும்.

மக்களின்  ஏகத்துவ கொள்கையே நிலைநாட்டுவகையில் தொழுகைக்கு  தேவையான அளவிற்கு இடத்தை ஏற்படுத்தி அதனுடைய முழுசெயல்பாடுகள் நேர்வழி கொள்கையான தவ்ஹீத் முறைப்படி  நிர்வக  ஏற்பாடுகளை நாம் அமைக்க வேண்டும்  .


தொழுகை பள்ளியே ஏற்படுத்த முதல் கட்டபணியாக சட்டதிட்டத்தை மார்க்க அடிப்படையில் ஏற்படுத்தி அதனை முழுமையாக  செயல்படுத்த அணைத்து தவ்ஹீத் சகோதரர்கள் ஓர் அணியில்  ஒன்று சேர வேண்டு .

1 .மூன்று வருடத்திற்கு ஒரு புதிய நிர்வாகம் அமையவேண்டும்
2.ஒவ்வொரு மாதமும் தவ்ஹீத் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளை ஆராய வேண்டும்.
3.மக்களின்  கொள்ளையற்ற பலஹீன செயல்பாடுகளை  ஆராயப்பட்டு அதற்கேற்ப நம்முடைய பிரச்சார வியோகத்தை அமைக்கவேண்டும் .
4.மேலே குறிப்பிட்டது போல மேலும் பல நல்ல செயல் திட்டங்களை செயர் குழுவில் அலச வேண்டும் .

இதனை நடைமுறைபடுத்த எப்போது செய்வது? எப்படி செய்வது ?யாராவது செய்கின்ற போது நாம் பார்க்கலாம் என்று எண்ணாமல் ஏன் நான் செய்ய கூடாது என்று எண்ணி எல்லோரும் முன்வரவேண்டும் (இன்ஷா அல்லாஹ)
காலம் கடத்தாமல் இன்ஷா அல்லா முயற்சி செய்வோம் வாருங்கள்.

இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டும் தவிர வேறில்லை. மறுமை வாழ்வு தான் வாழ்வாகும். அவர்கள் அறியக் கூடாதா? (அல்குர்ஆன்: 29 : 64) 


                                           ஆசிரியர் - முஹம்ரா ஆன்லைனுக்காக
                                                                      
கொள்கை சகோதரர் -  செய்யது அலி                                                                               
Area Sales Manager
Sultan Syed Ibrahim General Trading L L C
Dubai U A E.