உண்மை செய்திகள் முஹாம்ரா ஆன்லைன்

...................உண்மை துணிவு நேர்மை இதுவே நமது இணையதளத்தின் தனி சிறப்பு .................

............................அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!!!! முஹாம்ராஆன்லைன்!!!!! இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது......
Loading...

Friday, November 11, 2011

மிக விரைவில் வருகிறது வெப்டிவி முஸ்லீம்களின் உரிமைகளை பாதுகாக்க!

இன்று முஸ்லீம்களின் உண்மை நிலவரங்களை பிற தொலைகாட்சிகளிலும் செய்திதாழ்களிலும்  அதிகமாகவே மூடிமறைக்கபடுகிறது என்பதை  நாம் அனைவரும்  அறிவோம் .இந்த நிலையில் நமக்கேன்று ஒரு செய்தி தொலை காட்சி அவசியம் தான் .அதனை  ஆரம்பிக்க நம்மால் உடனே நேரடியாக செய்யமுடியாது .
அதற்கான பொருளாதாரம் மிகவும் அவசியம் .பணம் படைத்த முஸ்லீம் செல்வந்தர்கள் நினைத்தால் நாளையே ஆரம்பிக்கலாம் .  முஸ்லீம்களின் உரிமைகளை பாதுகாக்க தொலைக்காட்சி ஆரம்பிக்க போதிய காலம் கடக்கலாம் .தற்போது மாற்றுவழியாக முஸ்லீம்களின் உண்மை செய்திகளை இணைதளம் மூலம் கொண்டுவரும் பணிகளை TNTJ  ஏற்பாடு செய்கிறது .

முதல் முயற்சியாக  இணைய செய்தித் தொலைக்காட்சி  ஆரம்பிக்க (வெப் டிவிக்கு)சானலுக்கு செய்தித் தொகுப்பாளர் பணிக்கு முழு நேரப் பணியாளர்கள் தேவை என்றும் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று  அறிவிக்கப்பட்டுள்ளது .மேலும் விபரங்களுக்கு - TNTJ மாநிலத் தலைமயம் -சென்னை 1. போன் - 99520 35444