உண்மை செய்திகள் முஹாம்ரா ஆன்லைன்

...................உண்மை துணிவு நேர்மை இதுவே நமது இணையதளத்தின் தனி சிறப்பு .................

............................அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!!!! முஹாம்ராஆன்லைன்!!!!! இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது......
Loading...

Saturday, August 27, 2011

அரசு நியாயத்தை நிலைநாட்டுமா !!!! பொறுத்திருந்து பார்போம்

ராஜீவ் காந்தி கொலைக்கு சம்பந்தப்பட்டவராகா கருதப்படும் இந்த மூன்று நபர் பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோர் செப்டம்பர் 9ம் தேதி தூக்கிலிடப்படுவர் என்று வேலூர் சிறை நிர்வாகம் தெரிவித்து விட்டது. இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பும், பதட்டமும் பற்றிக் கொண்டுள்ளது. இதை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன.

தமிழ் சினிமா துறையும் தூக்கு போடுவதை கண்டித்து ஒரு நாள் போராடும் என்று அறிவித்துவிட்டார்கள் .

இது போல் வைக்கோ , ராமதாஸ் போன்ற அவர்களும் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்து விட்டு ,இதை முதல்வர் அவர்கள் தடுக்கவேண்டும் . இதனால் அவரை சந்திக்கவும் தயங்கமாட்டேன் என்று முழங்குகின்றார் .

இதுபோல் முன்னால் முதல்வர் கலைஞர் அவர்களும் இந்த தூக்கு போடுவதை தடுக்கும் பொறுப்பு முதல்வருக்கு உள்ளது என்று கூறிவிட்டார்

ஒரு உண்மையான குற்றவாளிகளை தூக்கிலிடக் கூடாது .அதற்து இத்தனை அமைப்புகளும் கண்டன குரளை பதிவு செய்கிறது .இந்த கண்டன குரலின் பார்வை அனைத்து சமுதாய மக்களின் ஒருவன் பாதிக்கும் போதும் தூக்கு தண்டனை அமல் படுத்தும் போது இவர்கள் போராட முன்வருவார்களா!

அல்லது ஒரு முஸ்லிம் ஒருவன் உண்மையான குற்றத்தை செய்து பிடிபட்டு தூக்கு தண்டனை நிறைவேற்றும் போது இத்தனை அமைப்புகளும் அந்த தூக்கை தடுக்க முன்வருமா!

அப்சல் குரு , கசாப் ,மற்றும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்த தாவுத் இப்றாகிம் மற்றும் மேலும் பல முஸ்லிம்கள் முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்க்காக இவர்கள் பிடிபட்டால் தூக்கு உறுதி என்று அனைவருக்கும் தெரியும். அப்படி ஒரு காலநிலை வரும் போது இத்தனை அமைப்பகளும் போராட முன் வருமா !

இந்த மூன்று நபர்களை தூக்கிலிடக் கூடாது என்று போராடும் இத்தனை அமைப்புகளும் இந்தியாவில் யாராக இருந்தாலும் தூக்கு என்ற சொற்கள் அகராதியில் கிடையாது என்பதை மையமாக வைத்து போராட்ட களத்துக்கு இத்தனை அமைப்புகளும் வருமா!!!! அல்லது
அரசு நியாயத்தை நிலைநாட்டுமா !!!! பொறுத்திருந்து பார்போம் .

இந்த களத்தொகுப்பு உங்களுக்கு பிடித்தால் எங்களடைய face book page யில் உங்களடைய கருத்தை பதிவு பன்னுமாறு கேட்டு கொள்கிறோம் .


இணையதள ஆசிரியர் - முஹாம்ரா ஆன்லைன்