உண்மை செய்திகள் முஹாம்ரா ஆன்லைன்

...................உண்மை துணிவு நேர்மை இதுவே நமது இணையதளத்தின் தனி சிறப்பு .................

............................அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!!!! முஹாம்ராஆன்லைன்!!!!! இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது......
Loading...

Thursday, August 25, 2011

மதக்கலவர தடுப்பு மசோதாவும் தமிழக முஸ்லீம் அமைப்புகளின் நிலையும் ஒரு பார்வை

மதக்கலவர தடுப்பு மசோதாவும் தமிழக முஸ்லீம் அமைப்புகளின் நிலையும் ஒரு பார்வை

இந்த தடுப்பு மசோதாவின் அமைப்புகளின் நிலைய பார்க்கும் முன் இவர்களின் கொள்கைகளை பார்த்து விட்டு வருவோம்

முதலில் நாம் அரசியலில் போட்டி போடும் அமைப்புகளை பார்ப்போம்
அரசியலில் சில முஸ்லீம் அமைப்புகள் இருந்தாலும் ஒரு சில அமைப்புகளை தவிர மற்ற அனைத்துக்கும் மக்களிடம் அதரவு கிடையாது .முஸ்லீம் லீக்கை பொருத்தவரை அவர்கள் எந்த காலத்திலும் அவர்கள் எந்த கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறார்களே ,அந்த கட்சிக்கு விஸ்வாசமாகத்தான் இருப்பார்கள் அது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இவர்கள் யாரையும் எதிர்த்து களத்தை சந்திக்கமாட்டார்கள் இந்த லீக்கை நாம் டம்மியாக வைத்துக்கொள்வோம் .

பின்னர் ஒரு அமைப்பு இவர்களின் கொள்கை என்ன என்று புரியாதபுதிராகவே உள்ளது .இவர்கள் பல பேணர்களில் சூழ்ந்து காணப்படுகிறார்கள் .தற்போது இவர்களும் அரசியலை நோக்கி பயணிக்கிரார்கள் .அதனால் இவர்களும் அமைதியுடன் இருப்பதை காண்கிறோம் .

பின்னர் நாம் பார்க்கும் அமைப்பு தமுமுக என்ற முஸ்லீம் அமைப்பு இந்த அமைப்பு நாங்கள் அல்லாவின் மீது வைத்த சத்தியத்தை ஒதரிவிட்டு தனி சின்னத்தில் போட்டி போட்டு முஸ்லீம்கள் பாதிக்கும் போது எங்களுடைய குரளை சட்டமன்றத்தில் ஒலிக்க செய்வோம் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி போட்டியிட்டார்கள் 2 MLA க்கள் தனிசின்னத்தில் நின்று வெற்றியும் பெற்றுவிட்டார்கள் சட்டமன்றத்திற்க்குள் குரல் கொடுப்பார்கள் என்று சமுதாயம் பார்த்த நிலையில் குரல் தாழ்ந்த நிலையில் அமைதியா அரசுக்கு சாதகமாக இருப்பதை கண்டு மக்களை கோபத்தில் ஆழ்த்திவிட்டார்கள் .

பின்னர் ஒரு முஸ்லீம் அமைப்பு உள்ளது அதனின் செயல்பாடுகள் அரசியலில் போட்டி போடாமலும் சட்டசபைக்குள் செல்லாமல் முஸ்லீம் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யமுடியும் என்ற கொள்கையுடன் செயல்படுகிறது.

முஸ்லீம் மக்களுக்கு பயன் பெறும் வகையில் மத்திய அரசு ஒரு சட்டத்தை அமல் படுத்தபோகுது அந்த பயனுள்ள சட்டத்தை எதிர்க்கும் தமிழக அரசை எதிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

மத்த முஸ்லீம் அமைப்புகள் அனைத்தும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்குது ஏன் இந்த வேடிக்கை என்று பார்த்தால் நாம் இப்போழுது அரசை எதிர்த்தால் வரப்போகும் தேர்தல்களில் நமக்கு சீட் ஒதுக்க மாட்டார்கள் என்பதை தெரிந்து கொண்டு அமைதிகாப்பதாக தெரிகிறது்

TNTJ போராட என்ன காரணம் என்று பார்த்தால் அவர்கள் தேர்தலில் போட்டி போடும் இயக்கம் இல்லை அதனால் யாருக்கும் எந்த கட்சிகளுக்கும் பயம் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது என்று நமக்கு தெரிகிறது.அனைத்துக்கும் முன்மாதிரியாக இருக்கும் இந்த அமைப்பின் பின்னால் போராட்ட களத்திற்க்கு வந்தால் நம்முடை குரல் நாடாளமனறத்திலும் ஒலிக்கும் என்பதே நமது ஆன்லைனின் கருத்து

இணைதள ஆசிரியர் -முஹாம்ரா ஆன்லைன்