உண்மை செய்திகள் முஹாம்ரா ஆன்லைன்

...................உண்மை துணிவு நேர்மை இதுவே நமது இணையதளத்தின் தனி சிறப்பு .................

............................அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!!!! முஹாம்ராஆன்லைன்!!!!! இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது......
Loading...

Sunday, October 2, 2011

பேட்டை முஸ்லீம் மேல் நிலைப்பள்ளியின் கல்வி தரம் மேலும் உயர்த்தபடுமா!


கடையநல்லூர் பேட்டை வாழ் முஸ்லீம் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்.கட்டிட துறையில் தரம் உயர்ந்து காணப்படும்
பேட்டை முஸ்லீம் மேல் நிலைப்பள்ளியின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு எழுதும் மடல்.
 பள்ளியின் முன்னேற்றத்தை போதிய கவனத்துடன் அதன் வளர்ச்சி பாதையின் கல்வி தரத்தை உயர்த்தாவிட்டால் நாளைய காலத்தில் பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைய தொடங்கிவிடும் .
இதன் விளைவாக பள்ளியின் மூடுவிழா நடக்காமல் பாதுகாக்கும் பொறுப்பு அனைத்து ஊள்ளூர் மக்களுக்கும் உண்டு.இன்று பிறக்கும் குழந்தைகள் அனைத்துக்கும் தாயின் கருவறையிலே குழந்தையின் எதிர்காலத்து பள்ளியே எப்படி அமைத்து கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.இன்று பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அனைத்தும் சராசரியாக 5 கிலோமீட்டர் தூரத்திலுள்ள( ஆங்கில மீடியம் ) பள்ளிக்கு செல்வதை அனைவரும் அறிந்த ஒன்றே !நம்முடைய பள்ளியின் கல்வி தரம் குறைவானதாகவே மதிப்பிடபடுகிறது.எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளியின் கல்வி தரத்தையும் ஆசிரியர்களின் தரத்தையும் மேலும் அதிகபடுத்தி பிறபகுதியிலுள்ள உள்ளூர் பள்ளிக்கு சவால் விடும் அளவுக்கு நம்முடைய பள்ளியின் தரத்தை உயர்த்த அனைத்து உள்ளூர் மக்களும் இதற்கான முயற்சி எடுத்து ஜமாத்தை வலியிறுத்தி கேட்க நமது ஆன்லைன் மூலம் கேட்டு கொள்கிறோம்.

ஆசிரியர் - முஹாம்ரா ஆன்லைன்.காம்