உண்மை செய்திகள் முஹாம்ரா ஆன்லைன்

...................உண்மை துணிவு நேர்மை இதுவே நமது இணையதளத்தின் தனி சிறப்பு .................

............................அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!!!! முஹாம்ராஆன்லைன்!!!!! இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது......
Loading...

Tuesday, September 6, 2011

ஃபலஸ்தீனை தனிநாடாக அறிவிக்க விரும்பாத அமெரிக்கா


நியூயார்க்,செப்டம்பர் 06 : ஃபலஸ்தீனத்தை தனி நாடாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்படுகிறது.
ஃபலஸ்தீனத்திற்கு தனிநாடு அந்தஸ்து தரக்கூடாது என காஸ்ஸா பகுதியை ஆக்கிரமித்து ஃபலஸ்தீனத்துடன் போர் செய்யும் இஸ்ரேல் கூறி வருகிறது.

இஸ்ரேலின் கூட்டாளியாக உள்ள அமெரிக்காவும் ஃபலஸ்தீனத்தை தனிநாடாக தற்போது அறிவிப்பதை விரும்பவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவோம், பின்னர் உரிய முடிவு எடுப்போம் என அமெரிக்கா கூறுகிறது.

ஃபலஸ்தீனத்தை தனிநாடாக அறிவிக்க கூடாது என்ற அமெரிக்காவின் முடிவுக்கு பெரும் ஆதரவு இல்லை. இதனால் ஐக்கிய நாடுகள் சபையின் வாக்கெடுப்பில் ஃபலஸ்தீனம் தனிநாடு கோரிக்கை வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.