உண்மை செய்திகள் முஹாம்ரா ஆன்லைன்

...................உண்மை துணிவு நேர்மை இதுவே நமது இணையதளத்தின் தனி சிறப்பு .................

............................அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!!!! முஹாம்ராஆன்லைன்!!!!! இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது......
Loading...

Saturday, October 22, 2011

உள்ளாட்சி வார்டின் வெற்றியை சொந்த கொண்டாட தார்மிக நியாயம் இயக்கங்களுக்கு உண்டா ?

நமது ஆன்லைனின் கருத்து
 நடந்து முடிந்த உள்ளாட்சி முடிவுகளின் படி தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் வரிசையில் முஸ்லீம் உறுப்பினர்களும் உள்ளனர் என்பதை நாம் அறிவோம்.

உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை மக்கள் முக்கியமாக பிரதான  கட்சிகளை பார்த்து வாக்களிப்பது கிடையாது .போட்டியிடும் உறுப்பினர்களில் உள்ளூர் செல்வாக்கு அடிப்படையில் தான் அந்த தொகுதியில் வெற்றி தோல்வி நிர்ணயம் செய்யப்படுகிறது. அவர் எந்த இயக்கத்தை சார்ந்தவர் என்பதை பார்த்து யாரும் வாக்களிப்பது கிடையாது . வார்டில் போட்டியிட்ட ஒருவரின் வெற்றி  அவர் சார்ந்த இயக்கத்தின் வெற்றியாக நாம் கருத முடியாது .
ஒரு வேளை நாம் இயக்கத்தின் வெற்றியாக கருதுவதாக இருந்தால் அந்த  தொகுதியில் வசிக்காத அவர்களுடைய இயக்கத்தை சார்ந்த மற்றொறு உறுப்பினர்களை நிறுத்தி வெற்றிபெற்றிருந்தால் அது ஒரு இயக்கத்தின் வெற்றி என்று நாம் கூறலாம். அதில் நமக்கு எந்த    உடன்பாடுமில்லை. அவ்வாறான வெற்றியை இயக்கங்கள்  பெறவில்லை

கடையநல்லூர்  தொகுதி வார்டில்  சாராசரியாக 33 உறுப்பினர்கள் போட்டியிட்டதாக கூறப்படுகிறது .

போட்டியிட்டு வெற்றிபெற்ற பல  உறுப்பினா்கள் மக்களுக்கு நன்கு அறிந்தவர்கள்  தான் அதனால் அவர்களினால் வெற்றிய சுவாசிக்க முடிந்தது .

கடையநல்லூர்  வார்டில்களில்  போட்டியிட்டு வெற்றி பெற்றார்களின் தற்போதைய நிலையே வைத்து . இவர்களுடைய வெற்றியை இயக்கங்கள்  சொந்த கொண்டாட நியாயம் உண்டா  ?  உள்ளூர்  மக்களால் அதிகமான நபர்க்களுக்கு தெரிந்த ஒருவர்  இவர்களுடைய வெற்றி அவருடைய சொந்த தனிதன்மைக்கு கிடைத்த வெற்றியாகவே நாம் கருதுகிறோம் .   ஒரு வேளை இவருடைய வெற்றிக்கு காரணமாக  இயக்கம் சார்ந்த பிரச்சாரத்தினால்தான் வெற்றிய சுவாசிக்கமுடிந்ததா ?  அப்படியிருந்தால்  கடையநல்லூர் வார்டுகளில் மேலும் போட்டியிட்ட  உங்களின் இயக்கத்தை சார்ந்தவர்களினால்  வெற்றியை சுவாசிக்க முடியாமல் போனதற்க்கு என்ன காரணம்? .

இது போல் இன்னும் சில இயக்கங்கள் உள்ளாட்சி தேர்தலில் எங்களுடைய இயக்க உறுப்பினர் வெற்றிபெற்றதாக அறிவித்துள்ளது  .அதுவும் அவர்களுடைய இயக்கத்தை சார்ந்த வெற்றியாக நாம் கருதமுடியாது .

ஒரு இயக்கத்தின் சார்ந்த வெற்றியாக நாம் கருதுவதாக இருந்தால் அது சட்டசபை தேர்தல் நடக்கும் போது அதில் போட்டியிட்டு அவர்களுடைய  உறுப்பினர் ஒருவர் வெற்றிபெற்றால் அதுவே இயக்கத்தின் வெற்றியாகும் .

இதனை அனைத்து இயக்கங்களும் விழங்கிகொண்டு உள்ளாடசி தேர்தலின்  வெற்றியை முன்னிலைபடுத்தி  பெருமையடிக்க வேண்டாம் என்று கேட்டுகொள்கிறோம் .

ஆசிரியர் - முஹாம்ரா ஆன்லைன்