
இவ்வாறாக நாம் வாழும் வாழ்க்கையில் நம்முடைய சகோதரன் ஒருவன் பாதிக்கப்பட்டாலும் நம்முடைய வேலைபாடுகள் மத்தியில் அவர்களை சந்தித்து அவர்களுடன் அதிகபட்சமாக இரண்டு நாளைக்கு மேல் இருப்பது கடினமான காரியம் .
நம்முடைய வெளிநாட்டு வாழ்கை முறையில் எந்த நிலையிலும் வெளிநாடுகளில் வசிக்கும் வரை யாறுக்கும் எந்த தீங்கும் வரக்கூடாது .
விளைவுகள் இரண்டு வகையில் ஏற்படுவது உண்டு ஒன்று நம்மால் தடுக்கமுடியாத விபத்தாக இருக்கலாம் .அடுத்து ஒன்று அரபு நாட்டின் சட்டதிட்டதிக்கு மாற்றமாக செயல் பட்டு அதன் விளைவாக நாம் பிடிபட்டால் நம்முடைய நிலை மோசமான நிலைக்கே சென்று விடும் .நம்முடைய ஆயுளுக்கும் நாம் சம்பாதித்த பணத்தை கோர்ட் வகைக்காக கொட்டினாலும் .தீர்பை அளிப்பது நீதியின் கையிலுள்ளது.

எனவே இதனை கருத்தில் கொண்டு தடைசெய்யப்பட்ட மூட்டை மருந்தை யாறும் பயன்படுத்த வேண்டாம் . நீங்கள் முறையான அரசினால் அனுமதிக்கப்பட்ட( பெஸ்ட் கண்ரோல் ) மருந்தை பயன்படுத்தி .கெட்ட விளைவுகள் நமக்கும் பிறருக்கும் ஏற்படாமல் நம்மை நம்பி வாழ்க்கை நடத்தும் நம்முடைய மனைவி மக்களுக்கு நல்ல முறையில் அவர்களுடைய மகிழ்ச்சிக்கு கெடு நிகழாதவாறு நடக்க நமது ஆன்லைன் கேட்டு கொள்கிறது.
எச்சரிக்கை உயிரை பலிகெடுக்கும் மூட்டை மருந்தை தவிர்ப்பீர்!!அரசின் சட்டத்தை நிலைநாட்டுவீர் .
இணையதள ஆசிரியர் - முஹாம்ரா ஆன்லைன்