உண்மை செய்திகள் முஹாம்ரா ஆன்லைன்

...................உண்மை துணிவு நேர்மை இதுவே நமது இணையதளத்தின் தனி சிறப்பு .................

............................அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!!!! முஹாம்ராஆன்லைன்!!!!! இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது......
Loading...

Monday, September 5, 2011

அன்னா ஹசாரே அவர்களை வைத்து இயக்கிய கட்சிகள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர்களாக அறிவிக்க முன்வருமா !

அன்னா ஹசாரே அவர்களை வைத்து இயக்கிய கட்சிகள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர்களாக அறிவிக்க முன்வருமா !

சாராசரியாகவே மூன்று மாதங்களுக்கு முன்பு வரை யார் என்று தெரியாத இந்த ஹசாரே அவர்கள் தற்போது இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்ற உயர்வுக்கு உயர்ந்து விட்டார் .


இது போன்று ஒவ்வொரு மனிதனும் எதாவது ஒரு கொள்கையை மையமாக வைத்து போராட்டகளத்தை சந்தித்தால் இன்னும் எத்தனை ஹசாரே போன்றவர்கள் வருவார்கள் என்று பொருத்திருந்து பார்போம் .

மீடியாக்களின் பார்வையில் கடந்த காலங்களில் நல்லவர்களாக வாழ்ந்தவர்கள் ,ஊழல் மற்றம் எந்த விதமான குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருந்து அவர்கள் நாட்டு நல்லதை முன்னிறுத்தி போராட்ட களத்தை சந்தித்தால் அவர்களை மற்றும் மீடியாக்களின் மூலம் நாட்டு மக்களுக்கு அவரின் செய்திகளை எடுத்து செல்லுவது சிறந்ததாக இருக்கும் .

இந்த நிலை பின்பற்றாமலிருந்தால் ஊழல் செய்தவனும் குற்ற செயலில் ஈடுபட்டவனும்
காவல் துறை அவர்களை நெருங்கும் போது அவர்கள் ஏதாவது நல்ல செய்திகளை முன்வைத்து போராட்ட களத்தை சந்திக்கும் போது அவர்களை மீடியாக்கள் நல்லவர் சமூக சேவகர்கள் போன்று காட்டும் போது மக்கள் மத்தியில் அவர்களுக்கு என்று தனி மரியாதை நாடுமுழுவதும் உருவாகி விடும் அவருடைய ஊழல் மற்றம் குற்ற செயல்கள் தற்போது மறைந்து விடும் .

கெட்டவர்கள் முன் நிறுத்தும் போராட்டங்களுக்கு இந்தியாவில் முதன்மை படுத்தவேண்டாம் என்பதே நமது கருத்து .

இணையதள ஆசிரியர் - முஹாம்ரா ஆன்லைன்