சவுத்ஆப்ரிக்கா,
நவம்பர் 20 : சவுத் ஆப்பரிக்க நாட்டுக்காக கிரிகெட் விளையாட்டில் விளையாட
கடந்த சில வருடங்களுக்கு முன்பு அறிமுகமான "ஹாசிம் அம்லா" என்பவர் பல்வேறு
நாட்டு வேகப்பந்து வீச்சாளர் மற்றும் சுழற் பந்து வீச்சாளர்களுக்கு
மத்தியில் இவர் ஓர் சவாலாகவே
இன்றுவரையும் இருந்து வருகிறார். மேலும்
குறைந்த சில வருடங்களிலேயே கிரிக்கெட் விளையாட்டில் இவர் பல்வேறு சாதனைகளை
புரிந்தவர், இதனால் இவருக்கு அந்நாட்டு ரசிகர்கள் இவரை நம்பிக்கை
நட்சத்திரம் என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள். எனினும் கடந்த சில
நாட்களுக்கு முன்பு ஒரு நாட்டுடன் இவர் விளையாட தயாரானார். அப்போது ஒரு
பிரபலமான (சாராய) பியர் கம்பெனி இவரை தொடர்பு கொண்டு தாங்கள் அணியக்கூடிய
விளையாட்டு ஆடையில் எங்களுடைய கம்பெனி விளம்பரத்தை அச்சிடலாம என்று
கேட்டனர். இவ்வாறு அணிந்தால் பல கோடி ரூபாய் பணம் தருவதாகவும் அவர்கள்
தெரிவித்தார்கள். இதனை கேட்ட விளையாட்டு வீரர் ஹாசிம் அம்லா இதற்க்கு நான்
ஒருக்காலும் சம்மதிக்க மாட்டேன் என்றும், ஏனெனில் இவற்றை இஸ்லாம்
முழுமையாக தடுத்துள்ளது என்றும்,அதனால்
நான் அவற்றை அணிய சம்மதிக்க
மாட்டேன் என்று தனது ஈமானில் உறுதிபட நின்றார். எனவே இவரின் ஈமானைப்
பார்த்து உலகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமியர்கள் மற்றும் அவருடைய ரசிகர்கள்
கூறும் போது, இந்த சாராய விளபரத்தை ஏற்க்க மறுத்த இவர் இஸ்லாத்தில் மிக
பெரிய பற்றும், அன்பும் உள்ளவராக இருப்பது எங்களுக்கு மிகவும்
சந்தோசத்தைதருகிறது.

தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ். ஜுபைர் அஹமது .ME( முத்து பேட்டை)