உண்மை செய்திகள் முஹாம்ரா ஆன்லைன்

...................உண்மை துணிவு நேர்மை இதுவே நமது இணையதளத்தின் தனி சிறப்பு .................

............................அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!!!! முஹாம்ராஆன்லைன்!!!!! இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது......
Loading...

Thursday, October 20, 2011

திசைமாறும் ரதயாத்திரை திகைக்க வைக்கும் நிலவரம்

ஊழலை ஒழிக்க அத்வானியின் ரதயாத்திரை அனைத்து மாநிலங்களுகளிலும் சென்றுள்ளது என்பதை நாம் அறிவோம் .இந்த ராதயாத்திரை தமிழகத்தில் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
என்றும் அவை செல்லும் பகுதியான வரும் 28ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், நெல்லை, கடையநல்லூர், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளின் வழியாக சென்று, பின் கேரளா மாநிலத்தை அடைவார். இவ்வாறு அந்த அறிக்கையில்  பொன்ராதகிருஷ்ன் அறிவித்துள்ளார் .

நம்முடைய பார்வை  - திசைமாறும் ரதயாத்திரை திகைக்க வைக்கும் நிலவரம் - ராதயாத்திரை ராஜபாளையத்திலிருந்து நெல்லை செல்கிறது பின்னர் அங்கிறுந்து கேரளாவுக்கு செல்ல பல வழிகள் உள்ளது என்பதை நாம் அறிவோம் .

அது மட்டும் அல்ல BJB யின் கோட்டை என்றழைக்கப்படும் நாகூர் கோவிலுக்கு ரதயாத்திரையின் செல்ல பாதையமைக்காமல் நெல்லைலிருந்து தென்காசி போன்ற பகுதிகளை தவிர்த்து விட்டு கடையநல்லூர் பகுதிக்கு வரும் என்று தெரிகிறது .இதன் நோக்கம் ஊழலை ஒழிப்பதற்க்குதான் என்றால் அனைத்து பகுதிகளையும் அவர்கள் தேர்வு செய்யாமல் கடையநல்லூர் பகுதியை குறிப்பாக தேர்வு செய்தது ஏன்னென்று குழம்பிய நிலையில் மக்களின் சிந்தனை தூன்டுகிறது.

அவர்களின் ரதயாத்திரை ஊழலை ஒழிப்பதற்க்குதான் என்றால் நாம் அவர்களை வரவேற்ப்போம் .ஆனால் அவர்களின் நோக்கம் மதவாதத்தை தூன்டும் செயலில் இறங்கலாம் .என்ற அச்சம் பல நபர்களுக்கு உள்ளது. நம்முடைய அச்சத்துக்கு  பின்னால் நடந்த பல ரதயாத்திரை நமக்கு உணர்த்துகிறது.இதற்க்கு தேவையான பாதுகாப்பை காவல்துறை அளித்து எந்த ஒரு அசம்பாவிதம் போன்றவை நடக்காதவாறு பாதுகாக்க வேண்டுகிறோம் .


      ஆசிரியர் - முஹாம்ரா ஆன்லைன்