உண்மை செய்திகள் முஹாம்ரா ஆன்லைன்

...................உண்மை துணிவு நேர்மை இதுவே நமது இணையதளத்தின் தனி சிறப்பு .................

............................அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!!!! முஹாம்ராஆன்லைன்!!!!! இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது......
Loading...

Thursday, November 3, 2011

வேண்டாத தளங்களை block செய்வது எப்படி?

இப்போது உலகமே கணினி மயம். எந்த அளவுக்கு நன்மையோ அந்த அளவுக்கு தீமையும் உள்ளது இணையத்தில். சில தளங்கள் தேவையற்ற தகவல்களை தந்து நம்மை, நம் மகன், மகள், மாணவர்களை கெடுக்க வாய்ப்பு உள்ளது. சரி எப்படி அவற்றை தடை செய்வது. இந்த கேள்விக்கு பதில்தான் இந்த பதிவு. 


நிறைய பேர் அதற்கு வழி சொல்லி இருப்பார்கள, நானும் அதையே சொல்லப் போறேன். ஆனா ஒரு விஷயம் மட்டும் புதுசா இருக்கும்.

முதலில் உங்கள் கம்ப்யூட்டர் மீது ரைட் கிளிக் செய்து "Manage" செல்லவும். இப்போது அதில் "Local User And Groups" என்பதை கிளிக் செய்யவும். இப்போது அதில் "user"என்பது இருக்கும் அதில் "Administrator" என்பதை ரைட் கிளிக் செய்து "Properties"பகுதிக்கு செல்ல்வும். இப்போது அதை படத்தில் உள்ளபடி செய்யவும்.
http://www.baleprabu.com


இப்போது மீண்டும் "Administrator" என்பதை ரைட் கிளிக் செய்து "Set Password"என்பதை கொடுத்து password set செய்து கொள்ளவும். 
http://www.baleprabu.com

இப்போது கம்ப்யூட்டரை "Log Off" செய்யவும். இப்போது இரண்டு account கள் வரும். அதில் administrator என்பதில் நுழையவும். இப்போது உங்கள் my computer ஐ ஓபன் செய்யவும். 
http://www.baleprabu.com
இனி செய்ய வேண்டியதை நம்ம மாஸ்டர் அண்ணன் தெளிவாக கூறி உள்ளார். அதை பின்பற்றவும். 


சில குறிப்புக்கான விளக்கம் அறிய -
http://www.baleprabu.com

கணினி பயனாளர்கள் பலரது கணினிகள், அவர்கள் மட்டுமின்றி, அவர்களை சார்ந்தவர்களாலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக வீட்டில் உபயோகிக்கும் கணினி, மற்றும் அலுவலகங்கள், கல்வி கூடங்கள் போன்றவற்றில் இணைய இணைப்பு இருப்பின், அவை தவறான உபயோகத்திற்கு பயன்படுத்தப் படுவது நாம் அறிந்தாலும் அதை தடுக்க இயலாமல் உள்ளது. 

உதாரணமாக வீட்டில் சிறுவர்கள் / மாணவர்கள் எந்நேரமும் ஆர்குட், யூடியுப் ஃ பேஸ்புக் என படிப்பில் கவனம் செலுத்தாமல் மூழ்கி கிடப்பது. இது போன்ற தளங்கள் மற்றும் வலைப்பக்கங்களை நமது கணினியில் Block செய்ய வேண்டுமெனில், அதற்கான மென்பொருட்கள் (காசு கொடுத்து வாங்கோணும்) சந்தையில் நிறைய உள்ளன. ஆனால் எந்த ஒரு மென்பொருளையும் உபயோகிக்காமல்  இது போன்ற தளங்களை விண்டோஸ் XP யில் Block செய்வது எப்படி என பார்க்கலாம். 

 My Computer ல் விண்டோஸ் XP இயங்குதளம் உள்ள ட்ரைவிற்கு சென்று அங்கு 
\Windows\System32\Drivers\etc என்ற கோப்புறைக்குள் சென்று அங்குள்ள hosts என்ற கோப்பை Notepad ல் திறந்து கொள்ளுங்கள். 
அந்த கோப்பின் கடைசி வரிக்கு சென்று அங்குள்ள 127.0.0.1 localhost என்ற வரிக்கு அடுத்த வரியில் 127.0.0.2 www.youtube.com எனவும், மற்றொரு தளத்தை Block செய்ய 127.0.0.3 www.sitename.com (உங்களுக்கு வேண்டியபடி) டைப் செய்து host கோப்பை சேமித்து. மூடி விடவும். 

   
கணினியை ஒருமுறை ரீஸ்டார்ட் செய்து விட்டால் போதும். இனி அந்த குறிப்பிட்ட தளங்கள் உங்கள் கணினியில் திறக்காது. 


  

http://www.baleprabu.com
இதன் மூலம் எத்தனை தளம் வேண்டுமென்றாலும் தடை செய்யலாம். சாதாரணமாக இதை செய்ய இயலாது administrator Account மூலமாக மட்டுமே செய்ய இயலும் என்பதை நினைவில் கொள்ளவும். 

இனி உங்களை தவிர மற்றவர்களை மற்றொரு Account மூலம் வர செய்து, அந்த தளங்களை பார்க்க விடாமல் வைக்க முடியும். 


நன்றி: சூர்யா கண்ணன்