உண்மை செய்திகள் முஹாம்ரா ஆன்லைன்

...................உண்மை துணிவு நேர்மை இதுவே நமது இணையதளத்தின் தனி சிறப்பு .................

............................அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!!!! முஹாம்ராஆன்லைன்!!!!! இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது......
Loading...

Friday, October 28, 2011

முத்துபேட்டை தோல்விக்கு காரணம் யார் ? முஸ்லீம்களின் அரசியல் கட்சிகள் பற்றிய சிறப்பு பார்வை-

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேர்தலில் போட்டியிடவில்லை. போட்டியிடக்கூடாது என்பதைக் கொள்கையாக வைத்துள்ள இந்த ஜமாஅத்தை பல வகையில் எதிர்த்தவர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். நாம் ஒற்றுமையைக் குலைப்பதாக குற்றம் சாட்டியவர்களின் சாயம் இந்த தேர்தலில் வெளுத்துவிட்டது.
உலக ஆதாயத்திற்காகவே TNTJ எதிர்த்தார்கள் என்பதை இந்த்த் தேர்தல் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. உண்மையில் இவர்கள் ஒற்றுமையை வலியுறுத்துபவர்கள் என்றால் ஏன் அனைவரும் சேர்ந்து ஒரு வேட்பாளரை நிறுத்தவில்லை? ஒரு வார்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருப்பது ஒற்றுமையின் அடையாளமா? தங்களின் சுய லாபத்திற்காகவே தவ்ஹீத் ஜமாஅத்தை அவர்கள் எதிர்க்கிறார்கள் என்பதை மக்கள் இந்த்த் தேர்தல் மூலம் நன்றாக உணர்ந்துள்ளார்கள்.

 உதாரணமாக முத்து பேட்டை என்ற முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும்  ஊரை நமது ஆய்வுக்கு எடுத்து கொள்வோம்  -

முஸ்லீம் அரசியல் அமைப்புகளின் கொள்கையற்ற ஒற்றுமையினால் முத்து பேட்டை பேரூராட்ச்சி தலைவர் பதவிக்கு எளிமையான முறையில் ADMK கட்சியின் வேட்பாளர் திரு.கோ.அருணாச்சலம் மொத்த வாக்கு:2328 பெற்று வெற்றிபெற்றார்  .

முத்து பேட்டை திரு.கோ.அருணாச்சலம் இவரின் வெற்றிக்கு காரணமான கொள்ளையற்ற முஸ்லீம் இயக்கங்களை பார்ப்போம்.

 1.SDPI கட்சியின் வேட்பாளர் ஜனாப்.அபூபக்கர் சித்திக் - வாக்கு -1926

2.VC கட்சியின் வேட்பாளர் ஜனாப்.அப்துல் சலீம்            -வாக்கு - 216

3. சுயேச்சை கட்சி வேட்பாளர் ஜனாப்.சஹாப்தீன்    -வாக்கு - 251

 4.DMK கட்சியின் வேட்பாளர் ஜனாப்.தமீம் - வாக்கு - 1491

5.IUML கட்சியின் வேட்பாளர் ஜனாப்.முஹைதீன் அடுமை - வாக்கு -192

6.MMK கட்சியின் வேட்பாளர் ஜனாப்.முஹம்மது மாலிக் - வாக்கு- 395

7.சுயேச்சை வேட்பாளர் ஜனாப்.லெப்பை தம்பி - வாக்கு -173

8. சுயேச்சை வேட்பாளர் ஜனாப்.ஹாரூன் - வாக்கு- 163

9. சுயேச்சை வேட்பாளர் ஜனாப்.ஹாஜா மைதீன் -வாக்கு-102

இது போன்ற கொள்ளையற்றவர்களினால் கோட்டையவிட்ட முத்து பேட்டை பேரூராட்சி தலைவர் பதவியே முஸ்லீம்களிடம் இருந்து தோல்வியே சந்திக்க காரணமாகயிருந்த  இவர்களை சமுதாயம் இனம்கண்டு புரிந்து நடக்க தாழ்மையுடன் சமுதாயத்தை வேண்டிகொள்கிறோம் .

முஸ்லீம் அரசியல் அமைப்புகள் அனைத்து ஒன்றினைந்து ஒரு முஸ்லீம்  வேட்பாளரை நிறுத்தியிருந்தால் இன்று நிலைமை முஸ்லீம் வேட்பாளர் ஒருவர் முத்து பேட்டை தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பார்.

பிரதான அரசியல் கட்சியான திமுக முஸ்லீம் வேட்பாளரான தமீம் என்பவரை நிறுத்தியிருந்தும் அவருடைய வெற்றிக்கு பிரகாசிக்கசெய்யாமல் ஒட்டு சீட்டை  சிதரவிட்ட சமுதாயமே ! சிந்திப்பீர்களா!

இவர்களா ?சமுதாயத்தை காப்பார்கள்  இல்லை சமுதாயத்தை நாசபடுத்தவே பதவிவெறிக்காகவே அரசியலில் நிற்க்கிறார்கள் இனியாவது திருந்துவார்களா! அல்லது சமுதாய மக்கள் இவர்களின் சூழ்ச்சிவலையில் சிக்காமல் இனி நடக்கும் தேர்தலில் பிரதான கட்சிகளான அரசியல் கட்சிகள் முஸ்லீம் வேட்பாளரை நிறுத்தினால் அனைத்து  மக்களும்  ஒரு முஸ்லீம் வேட்பாளரை மட்டும் ஆதரித்து முஸ்லீம் வேட்பாளரின் வெற்றியே பிரகாசிக்க செய்யுங்கள் .

ஒரு வேளை பிரதான அரசியல் கட்சிகள் முஸ்லீம் வேட்பாளரை நிறுத்தாவிட்டால் .அனைத்து முஸ்லீம் இயக்கங்களும் ஏகமனதோட ஒரு முஸ்லீம் வேட்பாளரை நிறுத்தி இவருடைய வெற்றிக்கு பாடுபடுங்கள் இனிவரும் காலங்களில்முஸ்லீம் அரசியல் கட்சிகள் ஓர் அணியில் நின்று  பக்குவமாக செயல்பட்டு சமுதாயத்தின் மானத்தை தலை நிமிரசெய்யுமாறு நமது ஆன்லைன் மூலம் அனைத்து இயக்கங்களுக்கும் கேட்டுகொள்கிறோம்


ஆசிரியர் - முஹாம்ரா ஆன்லைன் .காம்
உங்களுடைய கருத்தை கீழே பதிவு பன்னுமாறு கேட்டு கொள்கிறோம்
foxyform.com