
இன்ஸூரன்ஸ் பாலிசிகள் எடுப்பது ஹராம் என்று நாம் அனைவருமே அறிந்திருப்போம் . ஆனால் அனைத்துப் பாலிசிகளுமே ஹலாம் என்று மக்கள் நினைத்ததன் காரணம் மருத்துவ பாலிசி எடுப்பதைக் கூட நம் மக்கள் புறந்தள்ளி விட்டார்கள் . ஆனால் மருத்துவப் பாலிசியின் மகத்துவத்தை அதன் பயன்பாட்டின் போதுதான் உணர முடியும் .
பொதுவாக மற்றைய பாலிசிகளைப் பொருத்தவரை நாம் கட்டிய பணம் கடைசிவரை அப்படியே இருக்கும் . அதற்கு வட்டி வேறு கொடுப்பார்கள்.ஆனால் இந்த மருத்துவப் பாலிசிகளுக்காக கட்டும் பணம் எக்காரணம் கொண்டும் திருப்பித் தரப்பட மாட்டாது . மாறாக அது ஒரு தவணைக்குள் காலாவதி ஆகிவிடும் .
உதாரணமாக நாம் வருடத்திற்கு 2500 ரூபாய் கட்டி ஒரு நபருக்கு பாலிசி எடுத்தால் நமக்கு ஏதாவது மருத்துவச் செலவுகள் வரும்போது அதற்கான முழுத் தொகையையும் அந்த நிறுவனங்கள் செலுத்திவிடும் . நமக்கு வேறு எந்தச் செலவுகளும் இல்லை .
அதே நேரம் அதில் மார்க்க ரீதியாகவும் குற்றமில்லை என மார்க்க அறிஞர்கள் தெரிவிக்கின்றனர் . ஆக நிர்பந்தத்திற்கு உதவும் இந்த மருத்துவ பாலிசியை அனைவரும் எடுக்கலாம் என்பதே நமது கருத்து.
தகவல் - S.முஹம்மது அப்பாஸ் ( உணர்வு வார இதழ் )