

கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனித்துவம் பெற்ற பிறகு உளப்பூர்வமாக செயல்படும் தவ்ஹீத் சகோதரர்களின் உழைப்பு இந்த ஜமாஅத்தை அழிக்க நினைக்கும் அயோக்கியர்களின் கூடாரத்திற்கு மிகப்பெரும் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆனால் மின்னல் வேகத்தில் செயலாற்றும் கொள்கைச் சகோதரர்கள் எப்படியாவது
இதைச் சரிசெய்து ஆக வேண்டும் என்ற வைராக்கியத்தில் இறைஉதவியின் மீது
நம்பிக்கை வைத்து களமிறங்கினர். மிகவிரைவான செயல்பாடுகளால் சேறும்
சகதியுமாய்க் காட்சி அளித்த காயிதே மில்லத் ஈத்கா திடல் சீர்
செய்யப்பட்டது..
அதன்
பிறகும் இறைவனுடைய நாட்டப்படி பெருமழை பொழிந்து மீண்டும் சேறும் சகதியுமாக
மாறியது. இறையருளில் நம்பிக்கை இழக்காத பேட்டை மற்றும் தெருப்பகுதியைச்
சார்ந்த கொள்கைச் சொந்தங்கள் எதிரிகளின் இழக்காரச் சிரிப்பை
பொருட்படுத்தாமல் இரவோடு இரவாக களத்தில் இரங்கி செயலாற்றினர். அல்லாஹ்வின்
அருளால் ஆயிரக் கணக்கான மக்கள் தொழும் வகையில் காலை நேரத்திற்குள் திடல்
சீர்செய்யப்பட்டது. தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாடுகளை நம்பி ஆயிரக் கணக்கில்
அணிவகுத்து வந்த மக்கள் திரளைப் பார்த்து தவ்ஹீத் சகோதரர்கள் ஆனந்தக்
கண்ணீருடன் இறைவனுக்கு நன்றி கூறினர்.
தர்ஹா
கூட்டமும் தவ்ஹீத் ஜமாஅத்தும் இணைந்து விட்டனர். கொள்கையில் சமரசம்
ஆகிவிட்டனர் என கொள்கையில் சறுகிய கொடுமதியினர் அவதூறு பரப்பினர். அவர்களுடைய
வாதப்படி தவ்ஹீத் ஜமாஅத்தும் தர்கா கூட்டத்தினரும் இணைந்தே பெருநாள்
தொழுகையை நடத்தினர் என்று வைத்துக் கொண்டாலும் நபிவழிப் படி நடத்தப்பட்ட
பெருநாள் தொழுகையில் தர்ஹா வழிபாடுகள், தாயத்து தகடுகள், மௌலூது
போன்ற இணைவைப்புக் காரியங்கள் நிரந்தர நரகத்தில் தள்ளக்கூடியவை என்றும்
திருமணம் என்ற பெயரில் சீர் சீராட்டுகள் வழங்குவதும் அடுத்தவன் சொத்தை
அநியாயமாக அபகரிப்பதும் பிற முஸ்லிம்களை நம்ப வைத்து கழுத்தறுப்தும் மோசடி
செய்வதும் வட்டி வாங்குவதும் நரகத்திற்குரிய காரியங்கள் என்று தௌ;ளத்
தெளிவாக எடுத்துரைக்கபபட்டது. இதற்கு பெருநாள் தொழுகையில் கலந்து கொண்ட
அனைத்து முஸ்லிம்களும் சாட்சியாவர். தனக்குத் தானே தலைமை இமாம் (?) பட்டம் சூட்டிக் கொண்ட தற்பெருமைக் கூட்டம் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?
அயோக்கியர்கள்
கூடாரத்தின் அனைத்து அவதூறுப் பிரச்சாரங்களுக்கும் ஆப்பு வைக்கும் வகையில்
பெருநாள் தொழுகையை நடத்த வைத்து அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
![]() |
Add caption |

