உண்மை செய்திகள் முஹாம்ரா ஆன்லைன்

...................உண்மை துணிவு நேர்மை இதுவே நமது இணையதளத்தின் தனி சிறப்பு .................

............................அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!!!! முஹாம்ராஆன்லைன்!!!!! இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது......
Loading...

Thursday, October 13, 2011

முஸ்லீம் இயக்கங்களின் நம்பகதன்மையே தீர்மானிப்பது எது?

இன்றைய காலத்தில் தமிழகத்தில் பல பெயர்களில் இஸ்லாமிய இயக்கங்கள் இருந்தாலும் முஸ்லீம் மக்கள் அனைத்து இயக்கங்களையும் அங்கீகரிப்பது கிடையாது.
அப்படியானால் தமிழகத்தில் எந்த இயக்கங்களை மக்கள் ஏற்பார்கள் .யாரை நிராகரிப்பார்கள் என்று நாம் எவ்வாறு மிதிப்பிட முடியும் என்று  கேள்வி சில சகோதர்கள் மத்தியிலிருந்து எழலாம்  இதனை கனிப்பது மிக எளிதானது.

இன்றைய காலநிலையில் தமிழகத்தில் சராசரியாக 20 முஸ்லீம் இயக்கங்கள் இருப்பதாக மதிப்பிட  படுகிறது.ஒன்று இரண்டு இயக்கங்களை தவிர மிதமுள்ள அனைத்து இயக்கங்களின் தலைவர் யார்? அவர்களின் கொள்கை என்ன என்று பெறுவாரியான மக்கள் அறியாத நிலையில் தான் உள்ளார்கள்.இவர்களுக்கு ஊருக்கு ஓருவர் என்ற அடிப்படையில் தமிழக முழுவதும் 200 உறுப்பினர்களை இவர்களால் ஒரு பகுதியில் திரட்ட முடியாது இவர்களிடம் மிஞ்சி நிற்பது அவர்களுடைய கொடி மற்றும் லட்டர் பேர்டுகள் மட்டுதான்.சில நபர்களுக்கு சில கேள்விகள் எழலாம் நேற்று எங்கள் ஊரிலுள்ள ஒரு திடலில் ஒரு லட்டர் பேர்டு  இயக்கத்தின் சார்பாக ஒரு பொது கூட்டம் நடைபெற்றது .அவருடைய பேச்சை கேட்க கூட்டம் கூடியதே என்று நினைக்கலாம் அதனை வைத்து நாம் அவர்களுக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்று கருதமுடியாது ஏனென்றால் பொது கூட்ட மேடை அமைத்து யாருடைய பேச்சாக இருந்தாலும் அதனை வேடிக்கை பார்க்க அதனுடைய அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் செல்லலாம் .ஆனால் அவர்களினால் ஒரு காலமும் ஒரு மாவட்டத்தை மட்டும் மையமாக மைத்து ஒரு பொது கூட்டத்தை நடத்துவதற்காக மக்களை  திரட்டி கொண்டுவருவது என்பது கடினமானது.

மீதமுள்ள சில இயக்கங்கள் யாவை ? எவ்வாறு தேர்ந்தெடுப்பது அதற்கான வழிமுறைகளை இப்போது பார்போம்.


  1.  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
  2. தமிழ் நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம்
  3. முஸ்லீம் லீக்
  4. மனித நீதி பாசறை
என்ற நான்கு இயக்கங்களில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தை தவிர மீதமுள்ள மூன்று இயக்கங்களும் அரசியல் இயக்கமாக மாறியுள்ளது.

இன்று வரை அனைத்து இயக்கங்களினால் அனைத்து ஊர்களின் சார்பாக குழப்பவாதிகள் என்று சமுதாய பிரிவினனக்கு காரணமானவர்கள் என்று கருதப்படும் (TNTJ ) என்று பிரச்சாரம் செய்கிறார்கள் .இவர்களின் (TNTJ) வின் சார்பாக முஸ்லீம் மக்களிடம் இடஒதுக்கிடாக இருந்தாலும் பொது கூட்டமாக இருந்தாலும் .தவ்ஹீத் விளக்க மாநாடாக இருந்தாலும் மக்களை அழைக்கும் போது  மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கிறார்களே அதற்க்கு என்ன காரணம் என்று நாம் பார்த்தால் . குர்-ஆன் ஹதீஸ்க்கு மாற்றமாகவும் ,இயக்கத்தின் விதிக்கு மாற்றமாகவும் எந்த ஒரு தனி மனிதன் செயல்பட்டாலும் அவர்களை அப்புறபடுத்துவது போன்ற பல சிறந்த செயல்பாடுகளினால் மக்களின் நம்பக தன்மை பெற்ற இயக்கமாக  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் விளங்குகின்றது.

இந்த ஆண்டு பித்ரா வெளிநாட்டு வரவுகள் மட்டும் அரை கோடிக்கு மேல் தலைமையின் மூலம் பெற்று அனைத்து மாவட்டங்களிலுள்ள  ஊர்களில் வினியோகம் செய்யப்பட்டு அதனுடைய வரவு மற்றும் வினியோக கணக்கை தன்னுடைய இணைதளத்தில் வெளியிட்டு மக்களின் நம்பக தன்மையே பெற்ற காரணத்தினால் மட்டுமே இந்த பித்ரா வரவு சாத்தியமானது .


மீதமுள்ள மூன்று இயக்கங்களும் அரசியல் சார்ந்தவை அதனால் அவர்களின் போராட்டங்களை பெறுவாரியான முஸ்லீம்  மக்கள் அங்கீகரிப்பது கிடையாது.அவர்களினால் ஒரு போதுவான அறிப்பை செய்து மக்களை ஒரு பகுதியில் இன்று வரை திரட்ட முடியவில்லை.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை தவிர அனைத்து இயக்கங்களும் ஒன்றினைந்தாவது ஒரு அழைப்பை விடுவார்கள் என்று நாம் ஆவலுடன் உள்ளோம் .


ஒரு வேளை இவர்கள் அனைவரும் ஒன்றினைந்து ஒரு தலைமையின் தலைவரின்  கீழ் வந்து செயல்படுவார்களேயானால் அதனை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆதரித்து அவர்களுடன் நாமும் இணைந்துவிடுவோம்  என்று TNTJ  தலைவர் பீஜே அவர்கள் அறிவிப்பு செய்து பல மாதங்கள் ஆகிவிட்டது.

அப்படி இருக்கும் போது குழப்பவாதிகள் யார் என்று மக்களுக்கு தெளிவாக தெரிந்துள்ளது  .முஸ்லீம் இயக்கங்களின் நம்பகதன்மைய பெற்ற அமைப்பாக TNTJ அமைந்துள்ளது.

         ஆசிரியர் - முஹாம்ரா ஆன்லைன் .காம.



 .




















உங்களின் கருத்தை பதிவு செய்ய கீழே உள்ள box யை பயன்படுத்தவும்.
foxyform.com