உண்மை செய்திகள் முஹாம்ரா ஆன்லைன்

...................உண்மை துணிவு நேர்மை இதுவே நமது இணையதளத்தின் தனி சிறப்பு .................

............................அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!!!! முஹாம்ராஆன்லைன்!!!!! இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது......
Loading...

Wednesday, August 17, 2011

இந்த நூற்றாண்டின் பயங்கரமான நோய் டிமென்ஷியா மருத்துவ உலகம் எச்சரிக்கை .

இந்த நூற்றாண்டில் உலகம் சந்திக்கப்போகும் மிகப்பெரும் மருத்துவ மற்றும் சமூக நெருக்கடியாக டிமென்ஷியா என்கிற நினைவிழப்பு நோய் உருவாகியிருப்பதாக அல்சைமர்ஸ் நோய்க்கான உலக அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்த நினைவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிப்பதற்கு ஆகப்போகும் செலவு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகப்பெரும் தொகையாக இருக்கும் என்றும் அந்த அமைப்பு தனது அறிக்கையில் கூறியுள்ளது.

உலக அளவில் இந்த நோயால் தற்போது சுமார் நான்கு கோடிபேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களைப் பராமரிப்பதற்கு இந்த ஆண்டு மட்டும் அறுபதாயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்று இவர்கள் மதிப்பிட்டிருக்கிறார்கள். அதாவது இன்றைய அளவில் உலகின் ஒட்டு மொத்த உற்பத்தியில் இது ஒரு சதவீதம் என்று இவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

டிமென்ஷியாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அடுத்த இருபது ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்பதால் அவர்களை பராமரிப்பதற்காகும் செலவும் அதே அளவுக்கு அதிகரிக்கும் என்றும் இவர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போதைய நிலையில் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதமானவர்கள் மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா நாடுகளில் இருக்கிறார்கள். காரணம் இங்கு தான் தற்போதைய நிலையில் மக்களின் ஆயுட்காலம் அதிகமாக இருக்கிறது.

ஆனால்இ இந்தியாஇ சீனாஇ லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டுவரும் பொருளாதார வளர்ச்சி அந்நாட்டு மக்களின் ஆயுட்காலத்தையும் அதிகப்படுத்தி வருவதால் இந்த நாடுகளில் டிமென்ஷியாவின் தாக்கமும் அது ஏற்படுத்தக் கூடிய பொருளாதார சுமையும் பல மடங்கு அதிகரிக்கும் என்றும் இந்த அறிக்கை எச்சரித்துள்ளது.

டிமென்ஷியா என்பது பெரும்பாலும் முதுமையில் தாக்கக்கூடிய மூளையின் நினைவாற்றல் மற்றும் செயற்படும் தன்மையில் ஏற்படும் மோசமான பாதிப்புக்களை டிமென்ஷியா என்கிற பொதுப்பெயரில் மருத்துவர்கள் அழைக்கிறார்கள்.

டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்ட நபரின் மூளையின் செயற்பாடு படிப்படியாக பாதிக்கப்பட்டு அவரது நினைவாற்றல் சிந்திக்கும் திறன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறன் உடலின் செயற்பாடு என்று எல்லாமே பாதிக்கப்படும்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் அனைத்து தேவைகளுக்கும் மற்றவரின் உதவியை நாடவேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்படுவார்.

உணவு உட்கொள்வதில் துவங்கி மலஜலம் கழிப்பது வரை எல்லாமே இவர்களுக்கு மற்றவர்கள் செய்தால்தான் உண்டு. அவர்களாக செய்யத் தெரியாது. நோய் முற்றும்போது மரணம் நிகழும். ஆனால் அதற்குள் நோயால் பாதிக்கப்பட்ட நபர் அனுபவிக்கும் வேதனைகளும் அவரை பராமரிக்க நேரும் குடும்பத்தவர் மற்றும் மருத்துவர்கள் சந்திக்க வேண்டிய இன்னல்களும் மிகக் குரூரமானவையாக இருக்கும்.

இந்த டிமென்ஷியா என்கிற நினைவிழப்பு நோய் ஏன் ஏற்படுகிறது என்பது தொடர்பாக இதுவரை உறுதியான தகவல்கள் இல்லை. ஆனால் டிமென்ஷியா உருவாவதற்கான பல காரணிகளில் அல்சைமர் என்று கூறப்படும் மூளை அழுகல் நோய் முக் கியமான காரணியாக விளங்குகிறது.

டிமென்ஷியாவை முழுமையாக குணப்படுத்தக் கூடிய மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.நன்றி : BBC உலக சேவை