

துபாய் -30-8-2011
துபாயில் ஈத் முபாரக் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்பு
மஸ்கட் தவிர அனைத்து அரபு நாடுகளில் வசிக்கும் முஸ்லீம்கள் இந்த ஆண்டு 29 நோன்புவைத்து இன்று பெருநாள் சிறப்பான முறையில் அனைத்து பகுதிலும் கொண்டாடப்பட்டது . துபாய் சிறப்பு தொழுகையில் பல ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் அதிகாலையில் எழுந்து புத்தாடைகள் அணிவித்து ஏழைகளுக்கு கொடுக்கவேண்டிய தர்மத்தை நிறைவேற்றிய பின் தொழுகை திடலை சுற்றிய அனைத்து சாலைகளும் மக்கள் வெள்ளத்தில் நிரப்பி காணப்பட்டது .
இதற்க்காக துபாய் போலிஸ் போக்குவரத்து வாகனங்கள் அனைத்தையும் தடுக்கப்பட்டு,அனைத்து வாகனங்களும் ஆங்காங்கே சாலைகளின் இருபுறமும் நிறுத்திவைக்கப்பட்டது.
கண்னுக்கெட்டா தூரம் வரையிலும் மக்கள் தொழுகையில் பங்கேற்றதை நாம் காணும் போது நமக்கே ஒரு விதமான சிலிர்ப்பு ஏற்படுகிறது .
பின்னர் தொழுகை முடிந்தவுடன் ஒருவருக்கெருவர் பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொண்டனர் .
இந்த பெருநாளை முன்னிட்டு பல கம்பனிகள் விடுமுறைகளையும் 3 நாள் அல்லது 5 நாள் வரை அறிவித்துவிட்டது.
இந்த விடுமுறை நாள் முடியும் வரை அனைத்து வாகனங்களையும் FREE PARKING எனவும் துபாய் அரசாங்கம் அறிவித்துவிட்டது .
இணையதள ஆசிரியர் - முஹாம்ரா ஆன்லைன்